25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பாரா ஆசிய விளையாட்டு: முதல் நாளிலேயே இந்தியா பதக்க வேட்டை! 4 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் குவிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டு: முதல் நாளிலேயே இந்தியா பதக்க வேட்டை! 4 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் குவிப்பு!

ஜப்பானின் அய்ச்சி – நகோயா பகுதியில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முதல் நாளிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் நாளின் முடிவில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில், இந்தியா சார்பில் 168 பேர் களமிறங்கியுள்ளனர்.

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 பிரிவில் இந்திய வீராங்கனைகள் மோனா அகர்வால், அவனி லெஹரா ஆகியோர் அபாரமாகச் செயல்பட்டனர்.

தகுதிச் சுற்றில் 629.1 புள்ளிகள் பெற்ற மோனா, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனையைப் பதிவு செய்தார். அவனி 626.4 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் மோனா 250.0 புள்ளிகள் பெற்று புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். அவனி 249.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தென் கொரியாவின் யுன்ரி லீ வெண்கலம் வென்றார்.

நீளம் தாண்டுதலில் நிஷாத் குமார் தங்கம்!

ஆண்களுக்கான டி47 பிரிவு நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் 7.11 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஈட்டி எறிதலில் இந்திய வீரர்களின் இரட்டை வெற்றி!

ஆண்களுக்கான எஃப்46 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரிங்கு கடைசி வாய்ப்பில் 65.11 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீரரான அஜீத் சிங் 65.02 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தப் பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களையும் கைப்பற்றியது.

நீச்சலில் வெள்ளிப் பதக்கம்!

ஆண்களுக்கான 100 மீட்டர் எஸ்13 பிரிவு நீச்சல் போட்டியில் இந்தியாவின் ரவி கார்த்திக் புதிகினா 56.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். உஸ்பெகிஸ்தானின் இகோர் தங்கமும், கஜகஸ்தானின் விக்டர் வெண்கலமும் பெற்றனர்.

ஜூடோவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!

பெண்களுக்கான 52 கிலோ ஜே2 பிரிவில் இந்தியாவின் கோகிலா அரையிறுதியில் சீனாவின் லியு இயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் உலன் பெக்கிடம் 0–1 என்ற கணக்கில் தோல்வியடைந்த அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆண்களுக்கான 70 கிலோ ஜே1 பிரிவில் இந்தியாவின் கபில் பார்மர் அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தோனேசியாவின் ராப்லி ர் அனாப்பை 1–0 என்ற கணக்கில் வீழ்த்திப் பதக்கம் வென்றார்.

முதல் நாளிலேயே பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்திருப்பது, இந்திய அணிக்கு உற்சாகமான தொடக்கமாக அமைந்துள்ளது.

2. இரு கைகளும் இல்லை; திறமையில் எல்லையே இல்லை! ஷீத்தல் தேவி உலக சாதனை!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தையில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி உலக சாதனையைச் சமன் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷீத்தல் தேவி மற்றும் பயல் நாக் பங்கேற்றனர்.

இரு கைகளும் இல்லாத நிலையிலும் கால்களின் உதவியுடன் வில்வித்தையில் அசத்தி வரும் ஷீத்தல் தேவி, தகுதிச்சுற்றில் அதிகபட்சமாக 704 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலக சாதனையைச் சமன் செய்தார்.

அவரது சாதனை, விடாமுயற்சியும் மனவலிமையும் இணைந்தால் எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

. நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி! ரவி கார்த்திக் அசத்தல்!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீட்டர் எஸ்13 பிரிவு நீச்சலில் இந்திய வீரர் ரவி கார்த்திக் புதிகினா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் அவர் 56.68 வினாடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

உஸ்பெகிஸ்தானின் இகோர் 52.90 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றார். கஜகஸ்தானின் விக்டர் 57.23 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைச் சேர்த்த ரவி கார்த்திக்கின் செயல்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News