செம்பருத்தி செடி கொத்துக் கொத்தாக பூக்க!
மூலிகையாகவும், பூவாகவும் இருக்கக்கூடிய செம்பருத்தியை கண்டிப்பாக பெரும்பாலான வீடுகளில் வளர்ப்பது வழக்கம்.அனைத்து விதமான பூக்காத பூச்செடிகளுக்கும் நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள உணவாக இருக்கக்கூடிய ஒரு பொருள் சிட்ரஸ்! இந்த சிட்ரஸ் நிறைந்த பழ வகைகளை நாம் இந்த செம்பருத்தி செடிக்கு உரமாக கொடுப்பதன் மூலம் நம்முடைய பூச்செடி ரொம்பவே அழகாக நிறைய பூக்களை மலர செய்யும்.
சிட்ரஸ் நிறைந்த பழ வகைகள் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்றவை ஆகும். அதிகம் சிட்ரஸ் நிறைந்துள்ள இப்பழங்களில் உங்களிடம் ஏதாவது ஒன்று இருந்தால், அதனுடைய தோல்பகுதிகளை வீணாக குப்பையில் போடாமல் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வாருங்கள்.20 தோல்கள் சேர்ந்ததும் அதில் முழுவதுமாக தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள். ரெண்டு நாட்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். எந்த ஒரு இயற்கையான பொருட்களையும் இரண்டு நாட்கள் ஊற விட்டு விட்டால் அதில் நுண்ணுயிரிகள் பெருக ஆரம்பிக்கும். இந்த நுண்ணுயிர், செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிட்ரஸ் நிறைந்துள்ள இந்த பழத்தின் தோலை இப்படி நுண்ணுயிர் பெருக செய்த பின்னர் செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும்.
நுண்ணுயிரிகள் பெருகிய பின்பு அந்த தண்ணீருடன்10 மடங்கு அளவிற்கு தண்ணீரை சேர்த்து நன்கு வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த நீரை உங்களுடைய செடிகளுக்கு வேரிலும் மற்ற எல்லா பகுதிகளிலும் உரமாக தெளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வரும் ஒவ்வொரு வாரமும் செய்து வர கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய பூச்செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து வளர ஆரம்பிக்கும். இந்த ஒரு உரத்தை மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய செடிகளுக்கு கொடுக்கும் உரத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
நம் கொடுக்கும் எந்த ஒரு உரத்தையும் கிரகித்துக் கொள்வதற்கு இந்த உரம் உபயோகமாக இருக்கும். எனவே நீங்கள் வழக்கம் போல பழக்கழிவுகள், இயற்கை உரங்கள் அல்லது செயற்கை உரங்கள் எது போட்டாலும் சரி, இந்த ஒரு உரத்தை கொடுத்துவிட்டு பின்னர் போடுங்கள். இப்படி செய்யும் பொழுது எத்தகைய பூக்காத செம்பருத்தி செடியும் கொத்துக் கொத்தாக பூக்கும். அதுமட்டுமல்லாமல் பெரிது பெரிதாக நல்ல நிறத்துடனும் பூக்கும். செம்பருத்தி செடி மட்டும் அல்லாமல் ரோஜா போன்ற எல்லா பூச்செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் கொடுக்கலாம். புதிதாக வாங்கும் செம்பருத்தி செடிக்கும், இது போல நீங்கள் ஒரு முறை செய்து வைத்து விட்டால், அதன் பிறகு நீங்கள் கொடுக்கும் என்ன உரத்தையும் அது எளிதாக கிரகித்துக் கொள்ளும். வேர் பகுதியில் இதை கொடுக்கும் பொழுது மண்ணில் வளமும், தரமும் அதிகரிக்கும்.
0
Leave a Reply