அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள பயனாளிகளுக்குவீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (03.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களின் தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.தமிழகமானது குடிசை இல்லாத தமிழகமாக மாற வேண்டும் என்று நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம் தான் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டம். இத்திட்டத்தின் கீழ்,ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்படவுள்ளது. நம்முடைய மாவட்டத்தில் 4433 பயனாளிகளுக்கு இது போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இவற்றையெல்லாம், பயன்படுத்தி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.35.38 கோடி மதிப்பில் 1011 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.76.37 கோடி மதிப்பில் 2182 வீடுகளும்
மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 56 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு 40 வீடுகளும் என மொத்தம் ரூ.35 கோடி மதிப்பில் 1000 வீடுகளும் என ஆக மொத்தம் 4193 வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.3.22 கோடி மதிப்பில் 92 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.11.58 கோடி மதிப்பில் 331 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் 100 வீடுகளும் என மொத்தம் 523 வீடுகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply