‘சமூக நீதி நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.09.2024) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S ., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழக சட்டபேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,
‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,
எனதுவாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்”.
என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
0
Leave a Reply