குண்டாயிருப்பு ஊராட்சியில் திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம். குண்டாயிருப்பு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாரபில், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று பட்டம்புதூரில் நடந்த அரசு விழாவில் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S. அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (25.11.2024) திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில், குத்துவிளக்கேற்றி, வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் குடியிருப்புக்களுக்கான சாவிகளை ஒப்படைத்தார்.
2021 2022 ஆம் நிதியாண்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கனிம வள நிதி திட்டத்தின்கீழ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குண்டாயிருப்பு ஊராட்சி பாறைப்பட்டி கிராமத்தில் திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6.10,000/- மதிப்பில் என மொத்தம் 21 திருநங்கைகளுக்கு ரூ 1.28 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தொகுப்பு விடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
மேலும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ், குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது ரூ.9.35 இலட்சம் மதிப்பிலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், சாலை வசதி மற்றும் கழிப்பிட வசதிக்காக பேவர் பிளாக் மற்றும் கழிவுநீர் வடிகால் ரூ.12 இலட்சம் மதிப்பிலும், சுற்றுச்சுவரானது ரூ.4 இலட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.25.35 இலட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ. 153.45 இலட்சம் மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய தொகுப்பு வீடுகளை நாம் இன்றைக்கு திருநங்கைகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். தாங்கள் ஆரோக்கியத்தை கவனித்து நல்ல முறையில் தங்களுக்கு வழங்கப்படும் வீடுகளை பயன்படுத்த வேண்டும்.திருநங்கைகளை நாம் அரவணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுத்து வருகிறதோ, அதே அளவிற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, திருநங்கைகளுக்கான குடியிருப்பு வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ், ரூ.3 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆருயிர் தேநீர் கடையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.லியாகத் அலிகான் (வ.கள), திரு.பிரின்ஸ்(கி.ஊ), வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திருமதி கலைவாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply