ரூ.1.28 கோடி மதிப்பிலான வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டிப் பணிகளை துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், செந்நெல்குடி கிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் (25.11.2024) பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், நபார்டு வங்கி கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.28 கோடி மதிப்பிலான ஆறு வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டிப் பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக பாவித்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி அதன் மூலம் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், செந்நெல்குடியில், அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.28 கோடி மதிப்பிலான ஆறு வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், செந்நெல்குடி அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடமானது தரைத்தளம் 230 ச.மீ (2475 ச.அடி) பரப்பளவிலும், முதல் தளமானது 230 ச.மீ.(2475 ச.அடி) பரப்பளவிலும் என மொத்தம் 460 ச.மீ (4950 ச.அடி) பரப்பளவிலும் அமைய உள்ளது.
மேலும், இந்த புதிய கட்டட கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், செய்றபொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.செந்தூர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply