கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பு சரியும் அபாயம்
சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார். டாலரை புறக்கணிக்க கடந்த 10 வருடங்களாக இந்த இரண்டு நாடுகள் எடுத்து வந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பொருளாதார உறவுகளில் கிட்டத்தட்ட டாலர் இல்லாத பரிவர்த்தனைகளையே நாங்கள் மேற்கொள்கிறோம், என்று அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் தனியாக ஒரு பணத்தை உருவாக்க உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இவர்களின் கடந்த கூட்டத்தில் தனியாக பணத்தை உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார்.மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா வர்த்தகத்திற்காக சீனாவை அதிகம் நம்பியிருப்பதால், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகமும் இந்த ஆண்டு விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த பரிவர்த்தனைகள் 200 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக மிஷுஸ்டின் கூறினார். இதற்கிடையில், ரஷ்யா-அமெரிக்க வர்த்தகம் சமீபத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.
2022 இல் உக்ரைன் மீதான அதன் முழு அளவிலான படையெடுப்பிற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மாஸ்கோவை உலக நிதிய அமைப்பிலிருந்து வெளியேற்றியது. இதனால் சீனா- ரஷ்யா இடையே வருத்தம் அதிகம் ஆனது. இதனால் சீனாவின் யுவான் பயன்பாடு இதில் அதிகம் ஆனது. அதோடு யுவானை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் பெய்ஜிங் சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. உலகளாவிய பயன்பாட்டில் யுவான் பங்கு ஜனவரியில் 1.9% இலிருந்து அக்டோபரில் 3.6% ஆக உயர்ந்தது.
முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது. முக்கியமாக டாலர் பயன்படுத்தும் நாடுகள் , அமெரிக்காவை சார்ந்து வாழும் நாடுகள் இதனால் கடுமையாக பின்னடைவை சந்திக்க நேரிடும். கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பும் இதனால் சரியும் அபாயம் ஏற்படலாம்
0
Leave a Reply