25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


இமெயில் சேவையான ஜிமெயிலுக்கு கூகுள் (Google) நிறுவனம் கொண்டுவரும் இந்த முக்கிய மாற்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இமெயில் சேவையான ஜிமெயிலுக்கு கூகுள் (Google) நிறுவனம் கொண்டுவரும் இந்த முக்கிய மாற்றம்

ஆயிரக்கணக்கான இமெயில்களால் குவிந்து கிடக்கும் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில், எந்தெந்த இமெயில்கள் மிகவும் முக்கியமான இமெயில்கள் (Important Emails) மற்றும் எதெல்லாம் தேவை இல்லாத இமெயில்கள் (Unwanted Emails) என்பதை கண்டறிவதும், அவைகளை ஒழுங்கமைப்பதும் எப்போதுமே ஒரு கடினமான காரியமாகவே இருக்கும். 2000 அல்லது 3000-க்கும் மேற்பட்ட இமெயில்களால், உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் (Gmail Account) நிரம்பி வழிகிறதா?ஏனென்றால் 100-க்கு 80 பேருடைய ஜிமெயில் அக்கவுண்ட்கள் ஆனது ஸ்பேம் அல்லது நியூஸ்லெட்டர்களால் (Spam and Newsletters) நிரம்பியுள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது அன்சப்ஸ்க்ரைப் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இதை செய்ய பல மணிநேரங்களை ஒதுக்க வேண்டியதாக இருக்கும். இந்த சிக்கலை சரிசெய்யும் நோக்கத்தின்கீழ் கூகுள் நிறுவனம் ஒரு புதிய ஜிமெயில் அம்சத்தை உருவாக்கி வருகிறது. சப்ஸ்கிரிப்ஷன் மேனேஜ்மென்ட் (Subscription Management) என்று அழைக்கப்படும் இந்த புதிய அம்சமானது, ஜிமெயில் பயனர்கள் தங்கள் இன்பாக்ஸில் எதை பார்க்க விரும்புகிறாரோ அதற்கான முழுக்கட்டுப்பாட்டை வழங்கும்.இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.. இந்த அம்சம் ஸ்பேம் மற்றும் விளம்பர இமெயில்களை தானாகவே கண்டறிந்து, அவைகளை வகைப்படுத்தி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மற்ற முக்கியமான இமெயில்களுக்கான இடத்தை ஒழுங்கமைக்கும். இதன் மூலம் எந்த இமெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதற்கு அவசர கவனம் தேவை என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இந்த அம்சம் ஜிமெயில் சைட்பாரில் (Gmail Sidebar) ஒரு புதிய டேப் (New Tab) ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கூடுதலாக, இந்த அம்சம் அனுப்புநரின் பெயர் மற்றும் லோகோவுடன் "அன்சப்ஸ்க்ரைப்" பட்டனையும் (Unsubscribe Button) வழங்கலாம், இது தேவையற்ற இமெயில்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும்.

பல்க் செண்டர்கள் (Bulk Senders) அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் உத்தரவிட்டு இருந்ததும், இந்த புதிய விதி வருகிற ஜூன் 2024 முதல் அமலுக்கு வரவுள்ளது என்பதும் இங்க குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து ஏப்ரல் 1 முதல் பல புதிய ஜிமெயில் விதிகள் (New Gmail Rules) அமலுக்கு வந்தன. அவைகள் அனைத்துமே.. ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. முதலாவதாக, புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்களானது கூகுளால் நிராகரிக்கப்படும். அடுத்ததாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இருக்காது. அவர்கள் நிரந்தரமாக பல்க் செண்டர் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.கடைசியாக, கூகுள் கொண்டுவந்துலால் சில கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன. மேலும் பல்க் செண்டர்கள் அனைவரும் டொமைன் அடிப்படையிலானமெசேஜ்அங்கீகாரம்,ரிப்போர்டிங்மற்றும்கன்ஃபார்ம்மென்ஸ்,டொமைன்கீஸால்அடையாளம்காணப்பட்டமெயில்மற்றும்செண்டர்பாலிசிஃப்ரேம்வொர்க்போன்றசிறந்தநடைமுறைகளையும்பயன்படுத்தவேண்டுமென்றுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் கூகுள் நிறுவனமானது அதன் ஜிமெயில் சேவையில் ஜெமினி ஏஐ-யின் திறன்களை (Gemini AI Capabilities) சேர்த்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜிமெயில் ஆப்பில் உள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனிமேல் வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும். அதாவது ஜிமெயில் ஆப்பில் உள்ள ஏஐ அசிஸ்டென்ட்டால் இனிமேல் உங்களுடைய குரலை கேட்க முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஜிமெயில் ஆப்பில் இருந்து தங்கள் குரலை பயன்படுத்தி இமெயில்களை அனுப்ப முடியும். மேலும் ஜிமெயிலில் உள்ள ஜெமினி ஏஐ-க்கு இன்ஸ்டன்ட் பாலிஷ் (Instant Polish) என்கிற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ் ஒரே ஒரு கிளிக்கில் தோராயமான சில குறிப்புகளை (Rough Notes) மெருகூட்டப்பட்ட ஒரு மின்னஞ்சலாக (Polished Email) மாற்ற முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News