மாடித்தோட்டம் அமைக்க டிப்ஸ் NO-1
பொதுவாக மாடித்தோட்டம் அமைக்கும் போது குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தை தேர்ந்தெடுப்பது விளைச்சலை அதிகரிக்க உதவும்.தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில்,தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத்தேடி அலைய வேண்டாம்.அதாவது மொட்டை மாடியில் காய்கறியையும், மாடிப்படிகளில் கீரைகளையும், சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவிதசெடிகளையும் நடலாம்.
தேங்காய் துருவியதும் கொட்டாங்குச்சிகளை தூக்கி எரியாமல் அவற்றில் கீரைகளை வளர்க்கலாம். வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில் பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும்.
காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்புகள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.முக்கியமாக பயன் படுத்தும் பொருட்களின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
0
Leave a Reply