“ திருநாவுக்கரசர்” ஈசனே கொடுத்த பட்டம்
திரு நாவுக்கே அரசன் என்று அந்த ஈசனே கொடுத்த பட்டம் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயக் குரவர்கள் நால்வரில்மற்றும் தேவார மூவர்களில்,வேளாளர்' குல நாயன்மார்.இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின்தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனைதொண்டு வழியில்வழிபட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.சமணசமயத்தைச்சேர்ந்தமன்னன்மகேந்திரபல்லவன்திருநாவுக்கரசரைப்பலவிதங்களில்துன்புறுத்தினான்.அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார்
நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மருணீக்கியார்.
சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்-தருமசேனர் .
நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்-திருநாவுக்கரசர்.
திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்-அப்பர் .
உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்-உழவாரத் தொண்டர்.
தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்-தாண்டகவேந்தர் -
0
Leave a Reply