25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க

பருப்பு வேக வைக்க பயன்படுத்தும்குக்கரில் இருந்து தண்ணீர் அதிகமாகி விட்டால் பருப்பு தண்ணீர் வெளியில் வரும். இதனை தவிர்க்க பருப்பு கொதித்த பின் குக்கரின் மூடியை மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு நான் விசிலை போட வேண்டும். இப்படி செய்தால் தண்ணீர் அதிகமாக இருந்தாலும் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வராமல் பருப்பு எளிதாக வெந்து வரும்.எனவே மிதமான தீயில் குக்கரை வைத்து சமைத்தால் நீர் வெளியே வராது .

உங்கள் குக்கரின் மூடியை சுற்றி எண்ணையை லேசாக தேய்த்து விடுங்கள், இதன் மூலம் தண்ணீர் வெளிவரும் பிரச்சனை ஏற்படாது. அது மட்டும்இல்லாமல் நீங்கள் வேக வைக்கும் பொருட்களோடு ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து விடுவதின் மூலமும் இந்த பிரச்சனை ஏற்படாது.

.பிற சமயங்களில் உங்கள் குக்கரில் இருக்கும் விசிலில் அழுக்கு, உணவு துகள்கள் சிக்கி இருக்கும்.அதனை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நீராவி வருவது சரியாக இருக்காது. எனவே குக்கரின் விசில் முழுவதையும் நீங்கள் சுத்தப்படுத்தி அடைப்புக்களை நீக்கி விடுவதின் மூலம் இந்த பிரச்சனை ஏற்படாது.

நீங்கள் பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்தநீரை பயன்படுத்தி சமைப்பதின் மூலம் உங்கள் குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க முடியும்.

சில மாதங்களுக்குப் பிறகு குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாகிவிடும். இதனால் கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும் . ரப்பர் தளர்வாக இருந்தால், அதை உடனே மாற்ற வேண்டும். ரப்பர் சீக்கிரம் தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரைப் போட்டால், அது நீண்ட காலம் நீடிக்கும். சிலர் குக்கர் ரப்பர்களை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால் லீக்கேஜ் பிரச்சனையும் வராது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News