சூப்பர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அமைதிப்படுத்த இரண்டு கிராம் கசகசா பால்
இந்திய உணவுகளில் கசகசாவிற்கு தனி இடம் உண்டு. அசைவ உணவுகளில் அதனது சுவையை அதிகரிக்க இது சேர்க்கப்படுகிறது. கசகசா உணவு பொருள் மட்டுமில்லை, இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. 100 கிராம் கசகசாவில் 46 கலோரிகளும் 1.6 கிராம் புரதச்சத்தும், கொழுப்பு 3.6 கிராமும், 2.5 கிராம் மாவுச்சத்துவும், நார்ச்சத்து 1.5 கிராமும், 2.5 கிராம் சோடியமும் இருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல நுண் சத்துக்களும் இதில் அடங்கி இருக்கின்றன. இதில் நார்ச்சத்து இருப்பதால் இது நம்முடைய குடலுக்கும் ஜீரணத்திற்கும் நன்மை செய்யும்.சூப்பர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அமைதிப்படுத்த இரண்டு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். நரம்பு தளர்ச்சி மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உள்ளது. இது நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவியாக இருக்கின்றது.பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலரும் மன அழுத்தம் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுகின்றனர். கசகசா இவர்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் சிறிதளவு கசகசாவை பேஸ்ட் போல அரைத்து சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்த பிரச்னையும் நீங்கும்.
கசகசாவை ஊறவைத்து அரைத்து அதில் தேங்காய் பால் அல்லது பால் சேர்த்து சாப்பிட,'மெனோபாஸ்' காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வறட்சி சரியாகும். பெண்கள் பூப்பெய்திய தொடக்க காலத்தில் மற்றும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி தோன்றும். இதனைத் தவிர்க்கவும் மேற்கண்ட மருந்தை மாதவிடாய்க்கு10 நாட்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும். பெண்களின் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு கசகசா உதவுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.கசகசா கொண்டு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஊற வைத்த கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் குடிக்கவும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க, காலை உணவில் இதை சாப்பிடுவது நன்மை பயக்கும்.100 கிராம் கசகசாவில் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து51 சதவீதம் வரை உள்ளது. எனவே, செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.கசகசா இரும்பு, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் துணை புரியும். ஆண்மை குறைவாக இருக்கும் ஆண்கள் கசகசா மற்றும் பாதாம் பால் ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஆண்மை பலம் பெறும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் கசகசா பாலை இரவில் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். கசகசாவை பெண்களுக்கும் கொடுக்கலாம். சிலர் குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் காலையில் கசகசா கலந்த பாலை குடித்து வந்தால் பெண்களின் கருப்பை பெலோப்பியன் குழாய்கள் சுத்தமாகும்.
உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும்பொழுது தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகின்றது. இதனை கசகசா சரிசெய்கின்றது. பாலில் கசகசா கலந்து குடிக்கும் பொழுது உறக்கமின்மை பிரச்னை சரியாகும். கசகசாவையும் பாலையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. இரண்டு ஸ்பூன் கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் குடிக்க ஆண்மை சக்தியை அதிகரிக்கும், நரம்பு இயக்கங்களை சீர்படுத்தி இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். கசகசாவில் காப்பர், கால்சியம் சத்துக்கள் உள்ளன. இவை எலும்பை பலப்படுத்த உதவுகிறது. அத்துடன் பாஸ்பரஸ், மாங்கனீசு சத்துகள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கிறது.கசகசாவை உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும்போது பாதுகாப்பானது. ஆனால், தனியாகஇதை தேநீர் வடிவிலோ, நீரில்ஊறவைத்தோ குடிக்கும்போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும். கசகசாவில் ஆல்கலாய்டுகள் அதிகம்உள்ளன. எனவே வறுத்து அல்லதுதண்ணீரில் நன்கு ஊறவைத்தே பயன்படுத்த வேண்டும். கசகசாவை அளவாகபயன்படுத்த வேண்டும். அதே நேரம்மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவுஎடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்னையும் இராது.
0
Leave a Reply