உணவுப் பாதையில் ஏற்படும் ஆறாத புண்கள் அல்சர்.
உணவுப் பாதையில் ஏற்படும் ஆறாத புண்கள் தான் நாம் அல்சர் என்கிறோம். இவற்றை பெப்டிக் அல்சர் என்று அழைப்பார்கள். இவை புற்றுநோயாக மாறும் ..கேஸ்ட்ரிக் (or) இரைப்பையில் அல்சர் இரைப்பையில் அதிக அளவு அமிலத்தன்மை தேங்கி நிற்பதால் எந்த உணவு சாப்பிட்டாலும், உடனே மேலே வரும்; வயிற்று வலியுடன் இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படும்; ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா காரணமாக உண்டாகும். இந்த வகை வயிற்றுப்புண் புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டது.
குடற் முதற்பகுதி ( or) டுயோடினம் அல்சர்குடலின் முதல் பகுதியை டுயோடினம் என்பார்கள். இதில் ஏற்படும் புண்களை டுயோடினல் அல்சர் என்பார்கள்; இதில் வயிற்று வலி உணவு உண்ட பின் சரியாகும்; அதிக பசி ஏற்படும்; இதனால் உடல் எடை அதிகரிக்கும். அதிக ஆபத்து இல்லாத வகை இது.. அமிலத்தன்மை குறைக்கும் மருந்துகள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொண்டால் நல்லது.
0
Leave a Reply