சொத்தில் பங்கு தர முடியாது என்று மாமாக்கள் மறுப்பு
இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தாகி விட்டது. சொத்தில் பங்கு தர முடியாது என்று மாமாக்கள் மறுப்பு. தாத்தா இரண்டு சுயமாக சம்பாதித்த வீடுகளில்,3 மகன்கள் மற்றும்2 மகள்கள் என்று உயில் எழுதப்படாத சொத்தில் அனைத்து பிள்ளைகளுக்கும் சம பங்கு இருக்கிறதா?
உங்களுடைய தாத்தா எந்த விதமான உயிலையும் எழுதாமல் இறந்து விட்டார். ஆனால் அவருக்கு இருக்கும் அனைத்து சொத்துமே அவர் சுயமாக சம்பாதித்து என்ற பொழுது அவருடைய கிளாஸ்1 நேரடி வாரிசுகளுக்கு, அதாவது மேற்கூறிய5 பிள்ளைகளுக்கும் அந்த உயிலில் சமமான பங்கு இருக்கிறது. அதாவது தாத்தாவின் மகளான திருமணமான பெண்ணான உங்கள் அம்மாவிற்கும் அதில் பங்கு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அதேபோல உங்கள் சித்திக்கும் அதில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுடைய மாமாக்கள் சொல்வது போல, இதில் திருமணமானவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. திருமணத்திற்கு வரதட்சணை கொடுத்தது, திருமணத்திற்கு செலவு செய்திருக்கிறோம் என்பதெல்லாம் இதில் பொருந்தாது. எனவே இருவருக்குமே சொத்தில் பங்கு இருக்கிறது.
0
Leave a Reply