25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் , அணைக்கட்டு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் பல்வேறு அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் , அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் பல்வேறு அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் / அணைக்கட்டு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில் பொது நிறுவனங்கள் குழு(2024-2025) 22.10.2024 விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தன்னாய்வு செய்ய உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவானது 22.10.2024 அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களுடன், விருதுநகர் சுற்றுலா மாளிகையில் கூடி மேற்கூறிய நிறுவனம் /வாரியம் / கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

தொடர்ந்து  பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் தணிக்கைப் பத்திகள் மற்றும் மேற்படி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News