வேலிப்பருத்தி என்ற உத்தாமணி
வேலிப்பருத்தி. இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு. எளிமையான தீர்வு. இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி. வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச காச நோய்கள் காணாமல் போய்விடும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல் கோழைக்கட்டு நீங்கும்.
இரைப்பு, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்க அதிகம் தேடப்படும் தாவரமாக உத்தாமணியே குழந்தைகள் நலனுக்கான மூலிகையும் கூட.வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும்போது, உத்தாமணி இலைகளைக் குடிநீரிட்டு அரைக் கரண்டியளவு கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும் .
0
Leave a Reply