நிர்ணயிக்கப்பட்பட எடையயை விட, 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செயப்பட்டார்.ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை ஏமாற்றம்.
மல்யுத்த போட்டியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், வயது 29 பங்கேற்றார். முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஐப்பானின் யுய் கசாகியை வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்க முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
லோக்சபாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அளித்த விளக்கம்.
நிர்ணயிக்கப்பட்ட எடையயை விட, 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செயப்பட்டார். இது தொடர்பான உலக மல்யுத்த சம்மேளனம் தன் கடுமையான எதிர்பார்ப்பை பதிவு செய்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாரிசில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா விடம் பிரதமர் மோடி பேசினார். அப்பொழுது உரிய நடிவடிக்கை எடுக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு, வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்துள்ளது. அவருக்கென பிரத்யேக நிபுணர்கள், பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். நிதியுதவி உட்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0
Leave a Reply