குறைந்த வேலை நேரத்தை கடைபிடித்து பொருளாதாரத்தில் மேம்பட வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை
ஜெர்மனியில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் முறையை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள ஜெர்மனி, அதிலிருந்து மீள கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மிகவும் குறைவான வேலை நேரத்தை கடைபிடிக்கின்றன.குறைந்த வேலை நேரத்தை கடைபிடித்தாலும் இந்த நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளதை உணர்ந்த ஜெர்மனியும் குறைந்த வேலை நேரத்தை கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முயற்சியாக வாரத்தில் 4 நாட்கள் வேலையும் 3 நாட்கள் விடுமுறையும் அளிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இவ்வாறு குறைந்த வேலை நாட்களை கடைபிடிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனது புத்துணர்ச்சி அடைந்து செயலாக்கம் அதிகரிக்கும் என ஜெர்மனி அரசு எதிர்ப்பார்க்கிறது. முன்னதாக வாரத்தில்4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் தொழிலாளர் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் அமலுக்கு வரும் இந்த திட்டம், நல்ல பொருளாதார மாற்றத்தை கொடுக்கும் என தொழிற்சங்கங்களும் ஜெர்மனி அரசும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. 6 மாதங்கள் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 45 நிறுவனக்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறை முடிவுக்கு வரும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
0
Leave a Reply