உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியா.
உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது சீசன் ,நேற்று ஆண்களுக் கான ஈட்டி எறிதல் எப். 57 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார் கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 41.92 மீ., எறிந்து, 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹேம் சந்திரா (41.17 மீ.,) கடைசி இடம் (10) பெற்றார்.
இந்தியாவின் விகாஷ், 6.96 மீ., மட்டும் தாண்டி, 6வது இடம் பெற்று, ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி 47) பதக்க வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீரர்அஜய் சிங் (6.31 மீ.,) 10 வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர்கள். ராகேஷ்பாய் (11.88 வினாடி), ஷ்ரேயான்ஸ் (12.18) கடைசி இரு இடம் (7,8) பெற்றனர்.
இந்தியா, இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்ற பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply