உலக சிட்டுக்குருவி தினம்
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் மற்றும்
உலக காடுகள் தினம் 20.03.24 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மாணவி வாணி அனைவரையும் வரவேற்றுப்பேசினாள்.பள்ளித்தலைமைஆசிரியர்திருமதி.ஜெயபவானிஅவர்கள்சிறப்புவிருந்தினராகியதமிழ்நாடுகலைஇலக்கியமாநிலத்துணைத்தலைவர்திரு.கண்மணிராசாஅவர்களைஅறிமுகப்படுத்திப்பேசினார்.பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும்அவர் மாணவர்களை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.பள்ளி மாணவர்கள்பேச்சு,பாடல்,கவிதை,உரையாடல்மற்றும்நடனம்வாயிலாகசிட்டுக்குருவிகள்பற்றியும் காடுகள் பற்றியும் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
திரு. கண்மணி ராசா அவர்கள் மாணவர்களிடம் பறவைகள், விலங்குகள் பற்றிய கதைகள் கூறினார். அவர்தன்னுடைய உரையில் இயற்கையோடுஒன்றிவாழவேண்டும்என்றும்இயற்கைத்தொடர்பானகேள்விகள்கேட்டும்மாணவர்களைஉற்சாகப்படுத்தினார்.மாணவன் பிரஜேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
0
Leave a Reply