கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய சுரைக்காய் சப்பாத்தி
தேவையான பொருட்கள்: -அரைப்பதற்கு...
சுரைக்காய் - 300 கிராம்,இஞ்சி -3 துண்டு,பூண்டு - 7-8,பச்சை மிளகாய் – 5,சீரகம் - 1 டீஸ்பூன்
சப்பாத்திக்கு...கொத்தமல்லி – கையளவு,மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,உப்பு - சுவைக்கேற்ப
கோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் சுரைக்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த சுரைக்காய் விழுதை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, கோதுமை மாவு சேர்த்து, நீர் சேர்க்காமல் அப்படியே பிசைய வேண்டும்.
சப்பாத்தி மாவை பிசைந்த பின், மாவு காய்ந்து போகாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவி மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த சப்பாத்தி மாவை சிறிது எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் தடவி முன்னும் பின்னும் அவ்வப்போது திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து சப்பாத்தி மாவையும் சப்பாத்திகளாக சுட்டு எடுத்தால், சுவையான சுரைக்காய் சப்பாத்தி தயார்.
சுரைக்காய் சப்பாத்தி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த சப்பாத்தியை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறையும். இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
0
Leave a Reply