உலக தேங்காய் தினம் – தேங்காயின் மகத்துவத்தை கொண்டாடுவோம்!
உலகளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் மொத்த தேங்காய் உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.
தேங்காயின் முக்கியத்துவம், அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் தென்னை விவசாயத்தின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தென்னை மரத்தின் காய், இலை, நார், ஓடு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. மேலும், தென்னை விவசாயம் லட்சக்கணக்கான மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
தேங்காய் உணவாக மட்டுமின்றி, சமையல் எண்ணெய், மருத்துவப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
“தென்னை வளர்ப்போம்… வளம் பெருக்குவோம்!”
0
Leave a Reply