சேப்பங்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி துாளை தூவினால், கரகரப்பாக, சுவையாக இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிதளவு இஞ்சியை துருவி, பச்சை மிளகாயுடன் வாணலியில் வதக்கி போட்டால் மணம் சூப்பராக இருக்கும்.
உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் பொடிமாஸ் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
தேங்காய் சாதம் செய்வதற்கு சற்று முற்றிய தேங்காய் ஏற்றது. எண்ணெய் சிறிதளவு சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்தால் போதும்.
ரவா தோசை செய்யும்போது அரிசி மாவிற்கு பதில் தேவையான அளவு சாதத்தை மிக்ஸியில் குழைய அடித்து செய்யலாம். ரவா தோசை முறுகலாகவும் இருக்கும். அதன் சுவையும் நன்றாக இருக்கும்.
0
Leave a Reply