25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.

சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும்,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால்  பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.

குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.

பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்துவிட்டு, பிறகு அதை கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.

சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து,சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.

அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். இவ்வாறு செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News