கீரை மசியல்
பூண்டு உரிக்க இதை விட ஒரு சூப்பர் டிப்ஸ் நம்ம கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். நீங்க உரிக்க வேண்டிய பூண்டு எல்லாம் ஒரு துணியில் போட்டு மூட்டை மாதிரி கட்டி எடுத்து கொள்ளுங்கள். நாம் காய் சீவும் சீவலில் இந்த பூண்டுமூட்டையை லேசா தேய்தால் போதும் உள்ள இருக்கும் பூண்டு எல்லாம் தோல் உரித்து வந்து விடும். இந்த முறையில் நீங்க பண்ணி பாருங்க எவ்வளவு பூண்டு இருந்தாலும் இனி அசால்டா உரிச்சி எடுத்துடலாம்.
கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனி சுவையுடன் இருக்கும்.
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை: பசுமையாகவும், ருசியாகவும் இருக்கும்.
பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது, புளி. போடுவதற்குப் பதிலாக, ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.
0
Leave a Reply