அத்திப்பழ அல்வா
தேவையான பொருட்கள் - அத்திப்பழம், பால், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், தேன் கால் கப், முந்திரி, பாதாம் - தேவையான அளவு.
செய்முறை: அத்திப்பழத்தை நறுக்கி, பால் விட்டு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம்பாகு காய்ச்சி, மசித்து வைத்த பழ விழுதை கொட்டி, நெய் விட்டுக் கிளறவும். முந்திரி, பாதாம் சேர்த்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி, தேன் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
0
Leave a Reply