ரவை இட்லி .
தேவையான பொருட்கள் - பாம்பே ரவை ஒரு கப். சற்று புளித்த தயிர்-ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு தேவையான அளவு. நெய் 2 டீஸ்பூன்,
தாளிக்க: மிளகு, அரை டீஸ்பூன், சீரகம்கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 2. இஞ்சி ஒரு துண்டு. கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6. எண்ணெய் டீஸ்பூன். 2
செய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து) இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்து எடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.
0
Leave a Reply