மிக்ஸட் வெஜிடபிள் அல்வா
தேவையானவை பொருட்கள் - கேரட் துருவல்,பீட்ரூட் துருவல், பரங்கிக்காய் துருவல், தேங்காய் துருவல் -தலா அரை கப், கோவா - கால் கப், சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் -சிறிதளவு.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் நெய்யை விட்டு, தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். காய்கறி துருவலைகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பாலை ஊற்றி வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும் கோவா சேர்த்து, சர்க்கரையைத் தூவி கிளறவும். இந்த கலவை ஒட்டாமல் அல்வா பதத்தில் வந்ததும் ஒரு முறை கிளறி இறக்கவும். பாதம். முந்திரி தூவி பரிமாறவும்.
0
Leave a Reply