அவல் அல்வா
தேவையான பொருட்கள் - பொடித்த அவல், பால் தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் அரை கப், கலர் சிறிதளவு, முந்திரி, பாதாம் தேவையான அளவு, குங்குமப்பூ சிறிதளவு.
செய்முறை: கடாயை காயவைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு, அவலை நன்றாக வறுத்து. மிக்ஸியில் போட்டு பாலை விட்டு நன்றாக அரைக்கவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம் பாகு வந்ததும் அரைத்த விழுதைக் கொட்டி கிளறவும். கலர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
0
Leave a Reply