தேசிய விருது தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார்,
ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது 'உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், "எதன் அடிப்படை யில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். சிறந்த நடிகரான விஜயராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணி நேரம் மேக்அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார்.
தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந் துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது" என தெரிவித்துள்ளார்
0
Leave a Reply