கம்பு சோள கார பணியாரம்.
தேவையான பொருட்கள்
1 டம்ளர் இட்லி அரிசி,1/2டம்ளர் கம்பு,1/4டம்ளர் சோளம்,1/4 கப் உளுந்து பருப்பு,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் கடலை பருப்பு
செய்முறை.
கம்பு ,சோளம், இட்லி அரிசி, உளுந்து பருப்பு ,வெந்தயம் ,அனைத்தையும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும்.
பின் மாவில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்டி கலக்கவும்.
அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் தடவி பின் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
0
Leave a Reply