சாமை தோசை
தேவையான பொருட்கள் – ஒரு கப் சாமை அரிசி, கால் கப் முழு உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, தேவையான எண்ணெய்
செய்முறை -
தேவையான பொருட்களை எடுத்து5 மணி நேரம் அரிசி உளுந்து தனித்தனியாக ஊற வைக்கவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, வெந்தயம் நன்றாக நைசாக அரைக்கவும். பிறகு சாமை அரிசியை சேர்த்து நன்கு அரைக்கவும்.அதில் கல் உப்பு சேர்த்து கலக்கி ஆறு மணி நேரம் வைக்கவும்.அது நன்கு பொங்கி வந்திருக்கும். இப்பொழுது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல், கார சட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே சுவையாக இருக்கும்.
0
Leave a Reply