முடக்கத்தான் கீரை துவையல்
தேவையான பொருட்கள்.-
4 கப் முடக்கத்தான் கீரை,1/4கப் நல்லெண்ணை,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி|,1தேக்கரண்டி வெந்தயம்,1 மேஜைக்கரண்டி உளுந்து,1 மேஜைக்கரண்டி தனியா,½கப் கடலை பருப்பு,4பல் பூண்டு, 1/2 கப் புதினா இலைகள்,
1 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை,4 காரமிளகாய்,சிட்டிகை பெருங்காயம்,2 அங்குலம் இஞ்சி தோலுரித்தது,2 மேஜைக்கரண்டி புளி பேஸ்ட், தேவையான உப்பு
செய்முறை -
மிதமான நெருப்பில் ஒரு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணையில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளிக்க பருப்புகள், மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வறுக்க வாசனை வரும் வரை,2 நிமிடம் கீரை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை
போகும்வரை வதக்க-5 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க வதக்கலையும், புளியும் சேர்த்து பிளெண்டரில்1 கப் நீர் சேர்த்து அரைக்க.
உப்பு சேர்த்து கலக்க. ருசியான முடக்கத்தான் கீரை துவையல் தயார். முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்.
0
Leave a Reply