முருங்கை இலை துவையல்
தேவையான பொருட்கள் -காம்பு நீக்கிய முருங்கை இலை 3 கையளவு, உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன், வத்தல் 6, புளி சின்ன எலுமிச்சை அளவு, பெருங்காயப் பொடி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன். கடுகு கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 கையளவு
செய்முறை எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பாக வறுக்கவும், வத்தல் பெருங்காயம், சேர்த்து வதங்கியதும், தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி முருங்கைக்கீரை சேர்க்கவும், 2 நிமிடம் வதக்கி, புளி, உப்பு சேர்க்கவும், நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும், தண்ணீர் தேவை என்றால் சிறிது தெளித்துக் கொள்ளவும், சூடான சாதத்திற்கு சுவையான முருங்கைக்கீரை துவையல்.
0
Leave a Reply