நூடுல்ஸ் வெஜ் சூப்
தேவையான பொருட்கள்:
1 கப் - நறுக்கிய காய்கறிகள் (வேக வைத்தது)
1/2 கப் - நூடுல்ஸ் ( வேக வைத்தது)
4 கப் - காய்கறி வேக வைத்த தண்ணீர் -
1 - வெங்காயம்
தேவையான அளவு-மிளகுத்தூள்
சிறிதளவு - வெங்காயத்தாள்
சிறிதளவு -மல்லி தழை
2 டீஸ்பூன் - வெண்ணெய்
1 டேபிள்ஸ்பூன் - கார்ன் மாவு
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.
இதில் சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.
நன்கு கொதித்த பின்னர் இறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி,மல்லி தழை,வெங்காயத்தாள், மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.
0
Leave a Reply