வல்லாரைக் கீரை துவையல்
தேவையான பொருட்கள்-
2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு எண்ணெய்,
ஒரு துண்டு கட்டி பெருங்காயம்,2ஸ்பூன் உளுந்து,
3 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம்,2 துண்டு இஞ்சி,
சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு ,1 கப் தேங்காய்,
சிறிதளவுதண்ணீர் .
செய்முறை -
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு 10 சின்ன வெங்காயம், இரண்டு துண்டு இஞ்சி, சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.
2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு உப்பு, தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தையும் நன்கு வதக்கி ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சுவையான ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல் ரெடி..
0
Leave a Reply