25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 

 வேப்பம் பூக்கள்.சித்திரை மாதத்தில் எங்கெங்கு பார்த்தாலும் பூத்துக்குலுங்குகிறது. இதில் பல வகை உணவுகள் செய்ய முடியும். சட்னி, ரசம், கிரேவி என வெயிலுக்கு இதமான பல்வேறு உணவுகளும் செய்யலாம். உங்களுக்கு இந்த வெயிலை சமாளிப்பதற்கு வேப்பம்பூ ரசம் மிகவும் உதவியாக இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக வேப்பம்பூ சர்பத் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 வேப்பம்பூக்கள், இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டவை. அது உங்கள் உடலை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்யும். இந்தப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதை உட்கொள்வதும் பாதுகாப்பானது.இது கிடைக்காத காலங்களில் இதை பொடியாக மற்றும் உலர்த்தி பயன்படுத்தப்படுகிறது. இதை பறித்தவுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம் பூக்கள் ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கிடைக்கும் ஒன்று. உங்கள் உணவில் இதை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வேப்பம்பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள்

வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது) தண்ணீர் – 2 கப்

மிளகுத்தூள் – 2 சிட்டிகை, இஞ்சி – ஒரு ஸ்பூன் இடித்தது, உப்பு – தேவையான அளவு, மாங்காய் – கொஞ்சம் துருவியது

செய்முறை

தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, அதில் வேப்பம்பூக்களை சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து பருகினால் அது உங்களுக்கு சிறந்த கோடை பானமாக இருக்கும்.

 வேம்பின் நற்குணங்கள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரிந்தவைதான். வேப்பம்பூக்களும் அதே அளவு நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கொடுக்கிறது.

 குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்று வலி போன வயிறு உபாதைகளை போக்குகிறது. இது பித்தம் உருவாவதை குறைக்கிறது. சளியை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடலில் உருவாகும் புழுக்களை அழிக்கிறது.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேப்பம்பூக்கள் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் செய்கிறது.

வேப்பம்பூக்களின் நன்மைகள் உடலுக்கு உறுதியளிப்பதுடன் நிற்கவில்லை. முகப்பருக்களை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News