இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும்
நமது உடலின்இரண்டாவது பெரியஉறுப்பு கல்லீரல்.இது கழிவுகளைவெளியேற்றவும், உணவைஜீரணிக்கவும், ரத்தம்உறைவதற்கு உதவும்புரதங்களின் உற்பத்தியையும்செய்வதுடன் ஹார்மோன்களைசீர் செய்வதுபோன்ற பலவகையான வேலைகளைசெய்கிறது. எனவேஇதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும் என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் உடலில்ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில்ஏற்படும் பிரச்சனைகள்தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல், உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
கல்லீரல் பாதிப்பை சில அறிகுறிகள்.
கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும்.
பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.
செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.
தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.
கவனமின்மை, நினைவாற்றல் இழப்பு
பசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.
கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:
நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
- தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.
- கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.
- கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.
- அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.
- கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இரு முறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.
- முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
ஆரம்பக் கட்டத்தில்இருக்கும் கல்லீரல்நோய்களுக்கு மருத்துவரின்ஆலோசனைப்படி மருந்துமற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதன்மூலம் குணப்படுத்தமுடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கானஅறிகுறிகள் தெரிந்தால்தகுந்த மருத்துவரைகலந்தாலோசிப்பது நல்லது
0
Leave a Reply