சுகரை விரட்டும் சுண்டைக்காய் சூரணம்
.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்தவை சுண்டைக்காய்கள்.. இந்த காய் பச்சையாக இருந்தாலும் பலன்தரும். காய்ந்து போனாலும் பலன் தரும். பழுத்து போனாலும் பலன் தரும். இதன் இலைகளும் பலன் தரும்.வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு சுண்டைக்காய் இலைகள் உபயோகமாகின்றன.. சுண்டை பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால்தலைவலிஉடனேநிற்கும்.துவர்ப்பும், லேசான கசப்புத்தன்மை நிறைந்த இந்த காய்கள், சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாகும். எனவே, பச்சை சுண்டைக்காயை கூடுமானவரை பயன்படுத்தலாம்.. சுண்டைக்காய் கிடைக்காத சமயங்களில் வேண்டுமானால், சுண்டை வற்றலை பயன்படுத்திக்கொள்ளலாம்..
சுண்டைக்காய் வற்றலை வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம். முற்றின சுண்டைக்காயை நசுக்கி உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பிறகு அதனை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளலாம்.அல்லது சுண்டைக்காயை நன்றாக நசுக்கி அதனை சுடுநீரில்5 நிமிடம் போட்டு எடுத்துவிட வேண்டும். பிறகு, புளித்த மோரில் சுண்டைக்காயை இரவு முழுவதும் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலை, வெறும் சுண்டைக்காயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்க வேண்டும். மீண்டும் இரவு நேரம் மோரில் சுண்டைக்காயை ஊற விட்டு, மறுநாள் காயை மட்டும் வெயிலில் காய விட வேண்டும். இப்படியே4 நாட்களும் செய்தால், சுண்டை வற்றல் ரெடி.
சுண்டைக்காய் வற்றல்: வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்தவும், வயிற்றுவலி, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற பிரச்சனைகளை இந்த வற்றல் சரி செய்கிறது.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம் என்பதால், வாரம்2 முறையாவது குழம்பு வைத்து சாப்பிடலாம்.. பசியை தூண்டக்கூடிய சக்தி சுண்டை வற்றலுக்கு உண்டு..இந்த சுண்டைக்காய் வற்றலை, பொடி செய்து, தினமும் 5 கிராம் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் என்கிறார்கள். இதைத்தவிர, வாயுத்தொந்தரவு நீங்கி, அல்சர் புண்களையும் ஆற்றிவிடும்.சுண்டைக்காய் வற்றலுடன், மிளககு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் போன்றவைகளை சம அளவு எடுத்து வறுத்து சாப்பிட்டாலும் அஜீரணம் நீங்கி, பசி நன்றாக எடுக்கும்
"சுண்டை வற்றல் சூரணம்" என்றே இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்கிறது இந்த சூரணத்தை, மோரில் கலந்து குடித்து வந்தால், குடல் வயிறு பகுதிகள் சுத்தமாகும்.. நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. இந்த சுண்டைகாய். பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்.. பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது இந்த சுண்டை காய்.
0
Leave a Reply