ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 36வது ஆண்டு குருபூஜை விழா.
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங்
காதலிற்சோடசங் காணுப சாரமே- திருமூலர்
நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 13ம் தேதி (29.08.2025) வெள்ளிக்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல்
ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 36வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.
திரு S.விஸ்வநாதன் அவர்கள் தர்மாதிகாரி ஸ்ரீ சிருங்கேரி மடம், மேல்மங்களம்.
கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.
இப்படிக்கு ஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்.
0
Leave a Reply