காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக 11.10.2025 அன்று மாற்றம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டமானது நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தொழிலாளர் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, 11.10.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply