அதிகப்படியான ஸ்மார்ட் போன் பயன்பாடு, சுகாதாரக் கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
.இரவில் அதிகமாக போன் உபயோகிப்பதால் தூக்க முறைகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஸ்மார்ட்போன் திரையிலிருந்து வெளிவரும் ப்ளூ லைட், தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவே தூங்குவதற்கு முன்பு அதிக நேரம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனைப் பார்ப்பதால் உறக்கமுறை சீர்குலைந்து, தூங்குவதை கடினமாக்குகிறது. இது, பகல் நேரத்தில் சோர்வு, உற்பத்தித் திறன் குறைவு மற்றும் தூக்கக் கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் நாம் இருக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் மன அழுத்தம் தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இரவில் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால், மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அதிக கவலை, ஒப்பீடு மற்றும் விரக்தி மனநிலையை ஏற்படுத்தலாம்.
அதிக காலம் இரவில் தொலைபேசி பயன்படுத்தி வந்தால், அது மனரீதியாக உங்களை மாற்றி, இரவில் தூக்கம் தாமதமாக வருவதற்கு வழிவகுக்கும். எனவே நீண்ட நேரம் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்வது, கேம் விளையாடுவது அல்லது வீடியோக்களை பார்ப்பது உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருந்தாலும், உங்கள் தூக்கத்தை தாமதப்படுத்தும்.
இருட்டான இடத்தில் பிரகாசமான ஸ்கிரீனைப் பார்ப்பது உங்கள் கண்களைக் கஷ்டப்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கண் வறட்சி, கண் சோர்வு மற்றும் பார்வை மங்கல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இத்தகைய சிக்கல்கள் உங்கள் பார்வை ஆரோக்கியத்தை பாதித்து, நீண்ட கால கண் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.
இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உங்கள் உறவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அது பிரச்சனைகளை ஏற்படுத்தும். எதையும் கவனிக்காமல் உங்கள் தொலைபேசியில் அதிகமாக மூழ்கி இருப்பது, உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தொடர்பையே துண்டித்து உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவதை பாதிக்கிறது
0
Leave a Reply