நவம்பரில் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ்.
நடிகர் அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ்’என்ற பெயரில் ஆவணப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தின் டிரைலர் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஏ.எல். விஜய், “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். சிறுவயதில் நாம் செய்யத் தவறிய விஷயங்களை பின்னாளில் தேடுவோம். இந்த ஆவணப்படமும் அதுபோன்ற ஒரு கதைக்களம்தான்.
அஜித்துக்கு மோட்டார் ரேஸ் மீதான ஆர்வம் இன்று நேற்று வந்ததல்ல; அது அவரது சிறுவயது கனவு. இப்போது தான் அந்தக் கனவு மற்றும் அவரது ஆர்வம் வெளி உலகத்துக்குத் தெரிய வருகிறது. இந்த ஆவணப்படம் நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகும்” என்றார்.
0
Leave a Reply