பீட்ரூட் சூப்
தேவையான பொருட்கள் - பீட்ரூட் அரைகிலோ, வெங்காயம் 1, எண்ணெய் 3 மேஜைக்கரண்டி, உருளைக்கிழங்கு 1, புதினா இலை சிறிதளவு, கிரீம் அரைகப், தண்ணீர் அரைகப், எலுமிச்சம் பழச்சாறு 1 தேக்கரண்டி, துருவிய எலுமிச்சம் பழத்தோல் அரை தேக்கரண்டி, மிளகுத்தூள், உப்பு தேவைக்கேற்ப,
செய்முறை - பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச்சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும், எலுமிச்சம் பழத்தோலைத் துருவி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடவைத்து வெங்காயத்தைஇரண்டுநிமிடம்வதக்கவும்.பிறகுநறுக்கியஉருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும், 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும், எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
0
Leave a Reply