உயர் ரத்த அழுத்தத்தை (High BP) கட்டுப்படுத்தும் எளிய வழிகள்.
உப்பைக் குறையுங்கள்: ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் போன்ற உப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.
காய்கறிகளை அதிகரியுங்கள்: கீரைகள், காய்கறிகள், பழங்களை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் நடைப்பயிற்சி: உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
எடையைக் கட்டுப்படுத்துங்கள்: ஆரோக்கியமான உடல் எடை ரத்த அழுத்த சீரான நிலைக்கு உதவும்.
போதுமான தூக்கம்: மன அழுத்தத்தைக் குறைத்து, தினமும் சீரான தூக்கத்தைப் பெறுங்கள்.
அதிக கஃபீனைத் தவிருங்கள்: அதிக அளவிலான தேநீர் மற்றும் காபி குடிப்பதைத் தவிருங்கள்.
மருந்துகளை நிறுத்தாதீர்கள்: மருத்துவர் ஆலோசனையின்றி ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளைத் தாமாகவே நிறுத்தக் கூடாது.
முக்கியக் குறிப்பு: உயர்BP இருந்தாலும் சிலருக்கு எந்த அறிகுறியும் வெளியே தெரியாது. எனவே, அவ்வப்போது ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
0
Leave a Reply