உடல் எடையை குறைக்கும் காலை நேர பயிற்சிகள் -பழக்கங்கள்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.அதிகப்படியான கலோரிகளை திறம்பட எரிக்க உதவும் ஒரு வகை உடற்பயிற்சியினை HIIT பயிற்சி என அழைக்கிறோம். இந்த பயிற்சிகளை தினமும் காலை தவறாது செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் யோகா பயிற்சிகளை தினமும் காலை செய்ய பழகுவது, அதிகப்படியான கலோரிகளை குறைப்பதோடு ஆரோக்கிய உடல் எடை இழப்புக்கும் உதவுகிறது.
காலை உணவை தவிர்ப்பது கொலஸ்ட்டிரால் தேக்கத்திற்கு வழிவகுப்பதோடு உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். எனவே, ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை,நேரத்திற்கு காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.எடுத்துக்கொள்ளும் காலை உணவில் முட்டைகள், முளைகட்டிய பயறு போன்ற புரத சத்து நிறைந்திருப்பதை உறுதி செய்வது நல்ல பலன் காண உதவும்.இரவு தூங்க சென்றுபோதுமான அளவு தூங்கி- விடியற்காலை எழுவது இந்த உடல் எடை குறைப்புக்கு உதவும்.வைட்டமின் டியின் சிறந்த மூலமாக இருக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செயலவிடுவது,சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்புக்களை கரைத்து ஆரோக்கிய உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.காலை நேரத்தில் காப்பின் நிறைந்த காபி அல்லது வழக்கமான டீ பருகுவதற்கு பதில் கிரீன் டீ மற்றும் கருப்பட்டி டீ பருகுவது கொலஸ்டிரால் தேக்கத்தை குறைத்து, ஆரோக்கிய உடல் எடை குறைப்புக்கு உதவும்.
0
Leave a Reply