விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்: மூத்த ஆலோசகர் (Senior Counseller)காலிப் பணியிடம்: 1தகுதிகள்:1. முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)காலிப் பணியிடம்: 2தகுதிகள்:1. இளநிலை /முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 23.07.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்மாவட்ட சமூகநல அலுவலகம்மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் (13.07.2024) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
விருதுநகர் சஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேருவதற்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (14.07.2024) நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெறும்பயிற்சிவகுப்பில் சேருவதற்கானநுழைவுத்தேர்வுகள்நடைபெற்றது.மத்திய அரசால் நடத்தப்படும் இரயில்வே தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான தேர்வர்களை பங்கு பெறச்செய்யும் நோக்கத்தில் இத்தேர்வு அரசுத்தேர்வு இயக்கத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மேற்படி தேர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் வங்கிப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 180 தேர்வர்களில் 103 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் சஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹஜி பி.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 468 தேர்வர்களி்ல் 263 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.அதன்படி தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (13.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாரியத்தில் ரூ.1 இலட்சம் மதிப்பில் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருவதையும், சத்திரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வரப்பட்டு வரும் பணிகளையும், சின்ன கொல்லப்பட்டி ஊராட்சி தெர்க்கூர் கிராமத்தில்உள்ளஅரசுமேல்நிலைப்பள்ளியில்ரூ.3இலட்சம்மதிப்பில்மிதிவண்டிநிறுத்தும்கூடம்அமைக்கப்பட்டுள்ளதையும்,போத்திரெட்டியாபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.39 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வரப்பட்டு வரும் பணிகளையும், நபார்டு நிதியின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பில் உப்பு ஓடையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும், நென்மேனி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பில் நென்மேனி- வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் (13. 07.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி -1 (குரூப் -1) க்கான முதல்நிலை போட்டித் தேர்வு வரும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகக்கூட்டரங்கில்(12.07.2024)மாற்றுத்திறனாளிகள்நலஅலுவலகம்மூலம்மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கடன் மேளாவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சுய தொழில் புரிவதற்காக 83 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.இக்கடன் வங்கி கடன் மேளாவில் 26 பயனாளிகளுக்கு தலா ரூ.6120/- வீதம் ரூ.1,59,120/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரத்தினையும், 120 பயனாளிகளுக்கு தலா ரூ.13,800/- வீதம் ரூ.16,56,000/- மதிப்பிலான திறன் பேசி (Smart Phone) களையும் என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.18,15,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வங்கி கடன் மேளாவில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்த 4 மாற்றுத்திறனாளுக்கு உடனடி தீர்வாக ரூ.2.70 இலட்சம் மதிப்பில் சுய தொழில் தொடங்குவதற்கு, வங்கி கடன்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.07.2024) அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 45 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector” என்ற 78-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 78-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களிடம் அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, உள்ளிட்ட அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், எனவே இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூலம் மூன்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 15.07.2024 அன்று தொடங்கப்பட்டு, 10 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தான திட்டங்களான, நான் முதல்வன் திட்டம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, நம்ம ஊரு சூப்பரு, 48 மணி நேரம் நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், பசுமை தமிழகம், நம்ம School, TNGCC, ஆடுகளம், தமிழ்ப் பரப்புரைக் கழகம், எண்ணும் எழுத்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இ.மதி திட்டம், Startup TN, கல்லூரி கனவு, நம் பள்ளி நம் பெருமை, வானவில் மன்றம், அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை, Tamilnadu Climate Change Mission, கலைத் திருவிழா- 2022-2023, மக்களுடன் முதல்வர், உலக முதலீட்டார் மாநாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்கள், தொடங்கி வைத்த அரசு நலத்திட்டங்கள், திட்டப்பணிகள், விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான Coffee with Collector, விரு கேர், கரிசல் இலக்கியம், திருக்குறள் முற்றோதல், கற்றது ஒழுகு, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை கண்டுகளித்து அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இன்று (11.07.2024) அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாளையம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்முகாமில், 41 பயனாளிகளுக்கு ரூ.28,00,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், 11 பயனாளிகளுக்கு ரூ.2,77,590/- மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், 83 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 12 பயனாளிகளுக்கு உழவர் அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி ஆணைகளையும், 25 பயனாளிகளுக்கு ரூ.27,00,000/- மதிப்பில் ஆதி திராவிடர் நத்தம் இணையவழி பட்டாக்களையும் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ.57,77,590/-மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் (11.07.2024) மாவட்ட நிர்வகாம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ் இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கிய கருத்தரங்கம், செவ்வியில் இலக்கியங்களின் சிறப்பு(சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள்) என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு சங்க இலக்கியம் குறித்தும், திருக்குறள் குறித்தும் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி, அதன் மூலமாக இந்த இரண்டு இலக்கிய செல்வங்கள் தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் இலக்கியங்களாக எப்படி இருக்கின்றன என்பது குறித்து எடுத்துச் சொல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.தமிழ் இலக்கிய மாணவர்கள் சங்க கால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், நீதி நூல்கள் கால இலக்கியங்கள் குறித்து பாடத்திட்டத்தில் பயில்கிறீர்கள். எப்பொழுதுமே ஒரு அறிவியல் படிக்கும்போது, அறிவியலினுடைய தத்துவங்கள் தாண்டி, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.எனவே எந்த ஒன்றுக்கும் அதனுடைய தத்துவங்கள், அடிப்படைகள், அதனுடைய இலக்கணங்களை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது எப்படி தனிமனிதனுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படுகிறது என்ற கேள்விகளில் தான் அந்த துறையினுடைய வளர்ச்சி இருப்பதாக நான் கருதுகிறேன். அது அறிவியலாக இருக்கட்டும் அல்லது மனுடவியலாக இருக்கட்டும் இது போன்ற இலக்கிய மாணவர்கள் இந்த கேள்வியை நீங்கள் தொடர்ச்சியாக எழுப்ப வேண்டும்.நாம் படிக்கிறோம் என்றால் அதனுடைய பயன், அதன் மூலம் நீங்கள் அந்த பயனை எப்படி பெற்று கொள்கிறார்கள். அதன் மூலமாக இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற இரண்டு கருதுகோலையும் வைத்து சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும் நீங்கள் பார்த்து வரவேண்டும்.மிகச் சிறந்த தமிழினுடைய ஆய்வறிஞர் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், திருக்குறளுக்கும் இடையே இருக்கக்கூடிய பதங்கள், கிளவிகள், வார்த்தைகளினுடைய மாறுபாடுகள் குறித்து மிக தீவிரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் தொல்காப்பியத்திற்கு பிறகு வரக்கூடிய இலக்கியங்களில் சங்க இலக்கியமும், திருக்குறளும் ஒவ்வொன்றும் காலத்தால் சற்று முன்னும் பின்னும் எப்படி வந்தன. சங்க இலக்கியத்தின் உடைய பெரும்பாலான கருத்துக்கள் திருக்குறளில் எப்படி சொல்லப்படுகிறது. திருக்குறளினுடைய மிக முக்கியமான உரிமைகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு எடுத்து கையாளப்படுகின்றன என்பது குறித்து தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.அதற்குப் பிறகு வந்த நீதி இலக்கியங்களும், நீதி நூல் கால இலக்கியங்களும், காப்பிய கால இலக்கியங்களிலும், பக்தி இலக்கிய கால படைப்புகளில் கூட சங்க இலக்கியத்தினுடைய கூறுகளை காண முடியும்.குறிப்பாக காப்பிய காலத்தை எடுத்துக் கொண்டால், கம்பராமாயணத்தின் உடைய மிக முக்கியமான கருத்துக்கள் சங்க இலக்கியத்திலிருந்தும், அதற்கு பிந்தைய நீதி நூல் கால இலக்கியங்களில் இருந்தும் மிக நேர்த்தியாக, அதுவும் குறிப்பாக திருக்குறளினுடைய வார்த்தைகளை இரண்டு மூன்று பதங்களை நேரடியாக பயன்படுத்தக்கூடிய அளவிற்கு அதனுடைய செல்வாக்கு பின்னாளில் உலகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக போற்றத்தக்க கம்பனின் உடைய பாடல்களில் அது இருக்கிறது. இதன் மூலம் முந்தைய இரண்டு இலக்கியங்களும் எத்தகைய வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டு இலக்கியங்களில் இருந்தும் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன் இருக்கிறது. நாம்; படித்ததை தாண்டி அதனுடைய பயன்பாடு ஏதேனும் இருக்கின்றதா என்ற கருத்துக்களில் எடுத்துப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக ஒரு மனிதனை இந்த வாழ்வியலுக்கு தயார்படுத்தக்கூடிய பணியை இலக்கியங்கள் செய்ய வேண்டும்.மனிதன் எப்போதுமே இன்பம் துன்பம் என்ற இரண்டு நிலைகளில் அவனுடைய வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கின்றான். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதை நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது. இதில் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் இன்பத்தை கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான். ஒரு மகிழ்ச்சி வருகிறது என்றால் அதனை தனி மனிதனாக கொண்டாடுவதற்கும் குடும்பமாக கொண்டாடுவதற்கும் சமூகத்தோடு இணைந்து கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான்.ஆனால் துன்பத்தை அவன் எதிர்கொள்கின்ற போது தான் மிக முக்கியமாக அவன் நுட்பமாக செயலாற்ற வேண்டி இருக்கிறது. தனி மனிதனுடைய துன்பத்தை அவன் எப்படி எதிர்கொள்வது, தனி மனிதன் துன்பத்தை அனுபவிக்கின்ற போது சமூகம் அவனுக்கு எப்படி உறுதுணையாக இருக்கின்றது. இந்த சமூகமே ஒரு துன்பத்தை அனுபவிக்கின்ற போது, எப்படி அதை கடக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் நம்முடைய இலக்கியங்கள் இன்பத்திற்கு வழிகாட்டுவதை விட துன்பத்திற்கு தான் அதிகமாக வழி காட்டுகிறது.இன்று இருக்கக்கூடிய நிகழ்கால வாழ்வியலில் அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் இந்த நான்கும் தான் இன்றைய உலகில் மிக முக்கியமான புவி அரசியலை தீர்மானிக்கிறது அல்லது புவி அரசியலுனுடைய மாற்றங்கள் இந்த நான்கினுள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சங்க இலக்கியத்தில் அடுத்து வரக்கூடிய சமூகத்திற்கு வழிகாட்டும் கருத்துக்களும் இருக்கின்றன.தமிழ் சமூகத்தினுடைய 2000 ஆண்டுகால வரலாற்றை எடுத்து பார்த்தோம் என்றால், தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட பல பண்பாட்டு மாற்றங்கள், பல சமூக சிக்கல்கள், பல ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழல்கள் என எல்லாவற்றையும் கல்வியின் மூலமாகத்தான் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வந்திருக்கின்றது.தனி மனிதனுடைய வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், அதனுடைய சிக்கலில் இருந்து நாம் கவனமாக கையாளுவதற்கும், உதவியை செய்வதற்கும், உதவியை பெறுவதற்கும் உள்ள பண்புகளை பற்றியும், சங்க இலக்கியம் தனிமனித வாழ்வியலுக்கும் சமூக வாழ்வுகளுக்கும் மிக முக்கியமான கருத்துகளை தொடர்ச்சியாக பேசுகிறது.இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்துகிறோம் என்றால் 2000 ஆண்டுகால மரபில் சொல்லப்பட்ட செய்திகள் இன்றளவும் அதனுடைய பொருத்தப்பாடு இருக்கிறது. அதற்கான தேவை இருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு கலாச்சாரத்தில் மானுட சமூகம் பூட்டப்பட்டு மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. எனவே இந்த நுகர்வு கலாச்சாரத்தில் இது போன்ற விழுமியங்களுக்கு எந்த சிக்கல்களும் வந்து விடக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக தான், உங்களின் மூலமாக இன்னும் ஒரு 2000 நபர்களை சென்று சேர்வதற்காக தான் இந்த கருத்தரங்கு. சங்க இலக்கியமும் திருக்குறளும் உலகின் ஆகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று. உலகில்; இலக்கியங்களில் சொல்லப்படக்கூடிய கருத்துக்கள் எந்த சமூகத்திலிருந்து பிறந்து இருக்கின்றதோ அந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்திகளை சங்க இலக்கியம், திருக்குறளை விட வேறு ஒரு இலக்கியம் சொல்லி இருக்க முடியாது. அப்படிப்பட்ட இலக்கியத்தை தொடர்ச்சியாக படியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இலக்கியம் சொல்லக்கூடிய வாழ்வியலோடு வாழுங்கள் என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் இணை இயக்குனர் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் “சங்கத்தின் தங்கம் குரல்”; என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிதா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி முதல்வர் முனைவர் ராஜகுரு அவர்கள் வாழ்த்துரையும், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமநாதன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.