விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 23.07.2024 முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரசாணை (நிலை) எண்.71, பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டேடார் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்:20.12.2016-ன் படி கீழ்க்கண்ட தகுதிகளின்படி கிறித்துவ தேவாலயம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள கட்டடத்த்pன் வயதிற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.1. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சம்2. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சம்3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரு.3.00 இலட்சம்தற்போது இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரச ஆணையிட்டுள்ளது.கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்க்பட்டுள்ள பணிகள் விவரம்:1) தேவாலயங்களில் பீடம் கட்டுதல் ( Construction of Pedestal in Churches)2) கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities )3) குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities)தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்க உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்:1. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து 2.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.2. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து 4.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து 6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (20.07.2024) பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.பின்னர், 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 5 பயனாளிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த 3 தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசினையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். நோய் வரும் முன்னே மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், டாக்டர்.கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இந்த வருமுன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர் என அனைத்து மருத்துவப்பணியாளர்களும் உங்கள் இருப்பிடத்தை தேடி வந்துள்ளார்கள். இதை நீங்கள் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட பணிகளையும் செய்து முடிப்போம் என தெரிவித்தார்.மேலும், இந்த முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலம் மருத்தும், குழந்தைகள் நல மருத்தும், குடல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், எழும்பு மூட்டு மருத்துவம், இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம், முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகளையும்,இரத்த முழு பரிசோதனை, இரத்த உறைதலை கண்டறிதல், இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த கொழுப்பு அளவு, யூரியா அளவு, கிரியாட்டினின் அளவு, இரத்த தகவல் மற்றும் மலேரியா டைபாய்டு காய்ச்சல், எச்.ஐ.வி, சளி மாதிரி பரிசோதனை, பால்வினை நோய், சர்க்கரை நோய், எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், 2021 முதல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தலா 37 முகாம்கள் நடத்தப்பட்டு, 2021 -2022- ஆம் ஆண்டில், 24,313 பயனாளிகளும், 2022-2023 - ஆம் ஆண்டில், 39,017 பயனாளிகளும், 2023-2024 - ஆம் ஆண்டில் 38,654 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். 2024 - 2025 ஆம் ஆண்டில், 37 முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 3 முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2430 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.பின்னர், செம்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டியில் (20.07.2024) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, இன்று புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இக்கடையின் மூலம் 697 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சசிகலா பொன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் Visual Communication & Creative Thinking துறைகளில் ஆர்வம் கொண்ட 100 பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு Coffee with Collector 83-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் யூ- டியூப் பிரபலங்கள் திரு.கோபி மற்றும் திரு.சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 82 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன்படி, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் யூ- டியூப் பிரபலங்கள் திரு.கோபி மற்றும் திரு.சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இந்த துறைகளில் உள்ள வாய்ப்புகள், அதற்கான படிப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும், என்னென்ன திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் எண்ணற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.மேலும், தனித்திறமையை வளர்த்துக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்தி தனிப்பட்ட திறன் படைப்பாற்றல் மூலம் பிரபலமான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும். மாணவர்களுக்கு இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.நமது வெற்றிக்கு தேவையான விஷயங்களை ஆர்வத்துடன் கவன சிதறல் இல்லாமல், தொடர்ந்து விடாம முயற்சியுடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். மேலும் ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூ- டியூப் பிரபலங்களுக்கு “விரு” என்ற சாம்பல் நிற அணிலின் உருவமைப்பிலான நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில் (19.07.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார், I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் ஆகியோர் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மாவட்ட நிர்வாகம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து “ஆய்வு நோக்கில் வ.உ.சி. யும், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பன்முகப் பார்வையும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான ஒருநாள் வரலாற்றுக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தலைமையில் (19.07.2024) நடைபெற்றது.இக்கருத்தரங்கில் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வை தேடுதல், ஆய்வுப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுதல், வரலாற்று மாணவர்களை ஊக்கப்படுத்துதல் குறித்து உரையாற்றினார்.தமிழ்நாட்டில் குறிப்பாக தொல்லியலில் ஏற்பட்ட சமீபகால ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் அது குறித்த விழிப்புணர்வை வழங்கியது ஒரு மைல்கல். தற்போது நாம் பெருமையாக பேசிக் பேசிக்கொண்டிருக்கக்கூடிய கீழடியின் தொடக்கமும் அப்படித்தான் இருந்தது. ஆனால், தற்போது வரலாற்று ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தொல்லியல் குறித்த ஆர்வமூட்டும் பயிற்சியின் விளைவாக அங்கிருந்து ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இந்த கீழடி பகுதியினுடைய தரைப்பகுதியில் இருந்து கருப்பு பானை ஓடைகளில் சில குறியீடுகள் இருக்கின்றன என்று ஆர்வம் கொண்டு அந்த ஆய்வை தொடர்ச்சியாக பல கட்டங்களாக பேசியும் எழுதியும் கொண்டு சென்றதின் விளைவுதான் அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது.அந்த ஆய்வுகள் தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குறிப்பாக வைப்பாற்றங்கரை என்று சொல்லக்கூடிய வைகைக்கும் தாமிரபரணிக்கும் இடையே பாயக்குடிய வைப்பாற்றங்கரையில் நமது மாவட்டத்தில் சில முக்கியமான ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இந்த செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்பது அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளுக்கு இந்த துறையை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.சமூக, அரசியல், விடுதலை என எந்த புரட்சியாக இருந்தாலும், மிகப்பெரிய கனவை சில சாமானியர்கள் அல்லது ஒரு சாமானியன் உருவாக்கிய வரலாறு உலகம் முழுவதும் இருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வ.உ.சி. அவர்களின் வரலாறு.சலபதி அவர்கள் வ.உ.சி குறித்து 16 வயதில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார். அது குறித்து இன்று வரைக்கும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சமூகத்தின் வ.உ.சி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கக் கூடியவர்.வ.உ.சி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் பற்றிய புத்தகத்தையும், அவர் குறித்து எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகளையும் படிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 பக்கம் 15 பக்கங்கள் ஒதுக்கி படிக்க வேண்டும்.வ.உ.சி.அவர்கள் ஆற்றிய பணிகள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு இருந்தன. வ.உ.சி. பற்றிய நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும், இன்னும் அவர் கனவு கண்ட ஒவ்வொரு தத்துவத்திலும், அது பொருளாதாரமாக தத்துவமாக இருக்கலாம், தமிழின் உடைய இலக்கிய மரபு குறித்த பெருமையாக இருக்கலாம், அவற்றை அவர் கொண்ட தத்துவங்களை அவர் அடைந்த பெருமைகளை எல்லாம் இன்று நாம் மீட்டு உருவாக்கி இருக்கிறோமா அல்லது இன்றைய சமூகம் அது குறித்து மதிப்பிடுகிறதா என்ற கேள்வியை எடுத்து பார்த்தால் இன்னும் நாம் வ.உ.சி குறித்து நிறைய பேச வேண்டும். இதன் தொடர்ச்சியான மரபும், இதன் தொடர்ச்சியான கன்னியையும், அடுத்த அறிவுத் தலைமுறைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கடத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கம் ஆகும்.இக்கருத்தரங்கில், நூலகர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் வ.உ.சி.யும் தமிழும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எழுத்தாளர் திரு.கா.உதயசங்கர் அவர்கள் வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் தமிழ்த்துறை, முனைவர் இரா.இலக்குவன் அவர்கள் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுகளில் வ.உ.சி.யும் பாரதியும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19.07.2024) கிருஷ்ணன் கோவில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பயின்று ஒன்றிய அரசு நிறுவனமான FDDI (Foot Wear Design and Development இன்ஸ்டிடியூட் )நடத்திய உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, ஹைதராபாத் நிறுவனத்தில் சேர்ந்துள்ள த. ஈஸ்வர பாண்டி மற்றும் FDDI சென்னை நிறுவனத்தில் சேர்ந்துள்ள அ.முகமது அஜ்மல் தக்க்ஷீன் ஆகிய மாணவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/கோ ஆப் டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மரு.இரா ஆனந்தகுமார். I A S., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசிலன் I A S, அவர்கள் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் (19.07.2024) மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு /கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மேலாண்மை இயக்குநர் மரு.இரா.ஆனந்தகுமார்.I A S. அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஷத்ரிய வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கருவூலம் சார்பில், வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ச.சுந்தர் அவர்கள் தலைமையில் 18.07.2024 அன்று நடைபெற்றது.ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை, சென்னை அவர்களின் அறிவுரையின்படி வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகிற அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தின் கீழ் வருகின்ற தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன்கருதி வருமான வரி பிடித்தம் குறித்த கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மதுரை சரக வருமான வரி துணை ஆணையர் திரு. மதுசூதனன், I.R.S., அவர்கள், வருமான வரி அலுவலர் திரு.ஜி.வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.