மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகக்கூட்டரங்கில்(12.07.2024)மாற்றுத்திறனாளிகள்நலஅலுவலகம்மூலம்மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கடன் மேளாவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சுய தொழில் புரிவதற்காக 83 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இக்கடன் வங்கி கடன் மேளாவில் 26 பயனாளிகளுக்கு தலா ரூ.6120/- வீதம் ரூ.1,59,120/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரத்தினையும், 120 பயனாளிகளுக்கு தலா ரூ.13,800/- வீதம் ரூ.16,56,000/- மதிப்பிலான திறன் பேசி (Smart Phone) களையும் என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.18,15,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வங்கி கடன் மேளாவில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்த 4 மாற்றுத்திறனாளுக்கு உடனடி தீர்வாக ரூ.2.70 இலட்சம் மதிப்பில் சுய தொழில் தொடங்குவதற்கு, வங்கி கடன்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply