நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேருவதற்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
விருதுநகர் சஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேருவதற்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (14.07.2024) நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெறும்பயிற்சிவகுப்பில் சேருவதற்கானநுழைவுத்தேர்வுகள்நடைபெற்றது.மத்திய அரசால் நடத்தப்படும் இரயில்வே தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான தேர்வர்களை பங்கு பெறச்செய்யும் நோக்கத்தில் இத்தேர்வு அரசுத்தேர்வு இயக்கத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மேற்படி தேர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வங்கிப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 180 தேர்வர்களில் 103 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் சஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹஜி பி.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 468 தேர்வர்களி்ல் 263 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.அதன்படி தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply